மதுக்கடை திறப்பு: அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை

மதுக்கடை திறப்பு: அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை

மதுக்கடை திறப்பு: அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை
Published on

மதுக்கடை திறக்கும் விஷயத்தில் விதிகளுடன் மக்களின் உணர்வையும் அறிந்து திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.

டாஸ்மாக் கடைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் திருமுல்லைவாயில் உட்பட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த 41 இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் விதிகளுக்கு உட்பட்டே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த நீதிமன்றம் விதிகளுடன் மக்களின் உணர்வையும் அறிந்து கடைகளைத் திறக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com