\
akash Baskaran
akash BaskaranAkash baskaran's insta

டாஸ்மாக் விவகாரம்: ஆகாஷ் பாஸ்கரனுக்கு உச்சநீதிமன்றத்தில் பின்னடைவு? என்ன நடந்தது?

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார் ஆகாஷ் பாஸ்கரன்.
Published on
Summary

டாஸ்மாக் முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என challenging செய்த ஆகாஷ் பாஸ்கரனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து, அவர் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகலாம் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்ததால், ஆகாஷ் பாஸ்கரனுக்கு சட்டரீதியான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக உத்தரவிட்டதை எதிர்த்து திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2025 மே மாதம் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து பல ஆவணங்களை பறிமுதல் செய்தது.

akash Baskaran
akash BaskaranAkash baskaran's insta

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதால் அதற்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

ஆனால், அமலாக்கத்துறை சார்பில், ஆவணங்கள் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டதாகவும், வேண்டுமானால் உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிதாக நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அமலக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரன் தனது தரப்பு வாதங்களை அமலக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முன்வைக்கலாம் என உத்தரவிட்டதோடு இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைகளை நீக்கியது.

Supreme court
Supreme court ANI

இந்த உத்தரவுக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, அந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக் ஷி,வி.மோகனா ஆகிய அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

akash Baskaran
சோப்பு, பற்பசைக்கு சைவ, அசைவக் குறியீடு.. மத்திய அரசு அதிரடி திருத்தம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com