\
டாஸ்மாக் இன்றைய வருவாய் ரூ.100 கோடி

டாஸ்மாக் இன்றைய வருவாய் ரூ.100 கோடி

டாஸ்மாக் இன்றைய வருவாய் ரூ.100 கோடி
Published on

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் இன்றைய வருவாய் 6 மணி நிலவரப்படி ரூ.100 கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி மீண்டும் தமிழக்த்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவை கடைபிடிக்கப்படுவது இல்லை என்பதால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கியது. இதனால் நேற்று முன் தினம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்தது. அப்போது டோக்கன் முறையில் மதுக்கள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று முன் தினம் மட்டும் 163 கோடிக்கு மது விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடியாக இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com