செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரத்தில் டாஸ்மாக் மூடல் !

செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரத்தில் டாஸ்மாக் மூடல் !

செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரத்தில் டாஸ்மாக் மூடல் !
Published on

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவர் புயல் கடலூரில் இருந்து 240 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ, சென்னையில் இருந்து 300 கீ.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது காற்றின் வேகம் 105 முதல் 115 கி.மீ வரை இருக்கிறது.

இன்று மதியம் அதி தீவிரபுயலாக வலுப்பெறக்கூடும். வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவாலாக மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com