\
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பார்கள் இன்று முதல் திறப்பு

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பார்கள் இன்று முதல் திறப்பு

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பார்கள் இன்று முதல் திறப்பு
Published on

டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களைத் தவிர்த்து, பிற இடங்களில் உள்ள பார்களை திறக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பார்களில் 50 சதவிகித இருக்கைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 17 தேதி முதல் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது 9 மாதங்களுக்குப் பிறகு பார்கள் திறக்கப்பட உள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com