தஞ்சை டூ திருச்சி: அதிகரிக்கும் கொரோனா; அச்சத்தில் மக்கள்

தஞ்சை டூ திருச்சி: அதிகரிக்கும் கொரோனா; அச்சத்தில் மக்கள்
தஞ்சை டூ திருச்சி: அதிகரிக்கும் கொரோனா; அச்சத்தில் மக்கள்

மண்ணச்சநல்லூர் அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தஞ்சை டிஇஎல்சி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதனால் அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியையுடன் தொடர்புடைய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆசிரியையின் கணவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இன்று மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 69 ஆசிரிய, ஆசிரியர்கள், 15 அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன்கள் என 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

தஞ்சையை தொடர்ந்து திருச்சியிலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com