\
தஞ்சை: புரோகிதர் போல் உள்ள வள்ளுவர் படத்தை நீக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சை: புரோகிதர் போல் உள்ள வள்ளுவர் படத்தை நீக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சை: புரோகிதர் போல் உள்ள வள்ளுவர் படத்தை நீக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்
Published on

சி.பி.எஸ்.சி 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து உள்ளதை கண்டித்தும் உடனடியாக நீக்கக் கோரியும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசும், பாரதிய ஐனதா கட்சியும் தொடர்ந்து திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசிவருவதோடு திருவள்ளுவரை ஒரு மதத்திற்குள் அடக்க முயல்கின்றனர். இந்நிலையில், சி.பி.எஸ்.சி 8ஆம் வகுப்பு பாடத்திடத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து படத்துடன் பாடமாக வைத்து அவமதித்து உள்ளனர். இதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தமிழ் பலைக்கலைக்கழக மாணவ மாணவிகள் இன்று மாலை வகுப்புகள் முடிந்த பிறகு பல்கலைக்கழக வாயில் முன்பு திருவள்ளுவர் படங்களுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சி.பிஎஸ்.சி பாடத்திட்டத்தில் உள்ள திருவள்ளுவர் படத்தை நீக்கவேண்டும் இல்லை என்றால் நாடு தழுவிய அளவில் மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாகவும் எச்சரித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com