தஞ்சை: தந்தை இல்லாத குறையை தத்ரூப சிலை மூலம் நிவர்த்தி செய்த சகோதரி... நெகிழ்ச்சி சம்பவம்
உயிரிழந்த தந்தையை மீண்டும் சிலையாக கொண்டு வந்து, தங்கையின் திருமணத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அக்கா ஒருவர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று மகள்கள் இருந்த நிலையில், முதல் இரண்டும் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார்.
அவர் உயிரிழந்து எட்டு ஆண்டுகள் ஆகியும், அவரது மூன்றாவது மகள் திருமணத்தில் செல்வம் இல்லாதது, அவரது குடும்பத்திற்கு வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடைசி மகளுக்கு மறையாத சோகமாகவும் இருந்துள்ளது.
மணமகளின் வருத்தத்தை போக்குவதற்காக ரூ. 6 லட்சம் செலவில், தனது தந்தையின் முழு உருவ சிலையை வடிவமைத்து இளைய சகோதரிக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் மூத்த சகோதரி புவனேஷ்வரி.
இந்த சம்பவம்,a மணமகள் லட்சுமி பிரபா மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உயிருடன் இல்லாத தன் தந்தையின் சிலைக்கு முன்பு மணமக்கள் மாலை மாற்றி தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது