தமிழ்நாடு
11 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கடைகள்- போராட்டம் தொடரும் என அறிவிப்பு
11 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கடைகள்- போராட்டம் தொடரும் என அறிவிப்பு
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 11 நாட்களாக நடைபெற்றத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு இன்று கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை அகற்றக்கோரியும், மீத்தேன் எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலைச் செய்யக்கோரியும் கதிராமங்கலத்தில் பல்வேறு நூதன முறையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 11 நாட்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட வியாபாரிகள் இன்று கடைகளை திறந்துள்ளனர். இருப்பினும் ஊருக்கு வெளியே சமைத்து உண்ணும் போராட்டம் தொடரும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

