\
குப்பை கிடங்கில் கிடந்த மனித மண்டை ஓடுகள்: திருக்காட்டுப்பள்ளியில் பரபரப்பு

குப்பை கிடங்கில் கிடந்த மனித மண்டை ஓடுகள்: திருக்காட்டுப்பள்ளியில் பரபரப்பு

குப்பை கிடங்கில் கிடந்த மனித மண்டை ஓடுகள்: திருக்காட்டுப்பள்ளியில் பரபரப்பு
Published on

திருக்காட்டுப்பள்ளி குப்பை கிடங்கில் மனித மண்டை ஓடுகள் மற்றும் உறுப்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருகாட்டுபள்ளியில் பிரேத பரிசோதனை அறை பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதால் அதை இடித்துவிட்டு குளிர்சாதன வசதியுடன் கூடிய பிரேத பரிசோதனை அறை கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஏற்கெனவே பிரேத பரிசோதனை முடிந்த உடல் பாகங்கள், பிணவறையில் உள்ள 7 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மனித மண்டை ஓடுகள் மற்றும் உறுப்புகளை அடக்கம் செய்யும்படி துப்புரவு பணியாளர்களிடம் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அதை முறையாக அடக்கம் செய்யாமல் குடமுருட்டி ஆறு லயன்கரை பகுதியில் போட்டுள்ளனர். ஒருநாய் அந்த பெட்டியைத் திறந்துள்ளது. அப்போது அதில் மனித மண்டை ஓடு இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கினார்.

இதையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு வந்த பேரூராட்சி மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி உடனடியாக அதை அப்புறப்படுத்தி நடுப்படுகையில் உள்ள இடுகாட்டில் புதைத்தனர். பேரூராட்சி மற்றும் துப்புரவு பணியாளர்களின் அலட்சியமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com