\
உயிரிழந்த அரசுப் பள்ளி ஆசிரியர்
உயிரிழந்த அரசுப் பள்ளி ஆசிரியர்pt desk

தஞ்சை | பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த அரசுப் பள்ளி ஆசிரியர்!

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on

செய்தியாளர்: ராஜா

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (57). இவர், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், செல்லத்துரை நேற்று மதியம் பள்ளி வகுப்பறையில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்த அரசுப் பள்ளி ஆசிரியர்
உயிரிழந்த அரசுப் பள்ளி ஆசிரியர்pt desk
உயிரிழந்த அரசுப் பள்ளி ஆசிரியர்
தி.மலை| மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக அரசுப் பள்ளி ஆசிரியரை தாக்கிய இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆசிரியரின் மகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com