விரைவுச் செய்திகள்: கனமழைக்கு வாய்ப்பு | ஜிஎஸ்எல்வி தோல்வி | காங். ட்விட்டர் முடக்கம்

விரைவுச் செய்திகள்: கனமழைக்கு வாய்ப்பு | ஜிஎஸ்எல்வி தோல்வி | காங். ட்விட்டர் முடக்கம்
விரைவுச் செய்திகள்: கனமழைக்கு வாய்ப்பு | ஜிஎஸ்எல்வி தோல்வி | காங். ட்விட்டர் முடக்கம்

ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டாம்: கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால், ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம்
தெரிவித்திருக்கிறது. அதிபட்சமாக தஞ்சாவூரில் 10 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி இருக்கிறது.

14 பேர் உடல் மீட்பு - 30பேர் நிலை என்ன?: ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட கின்னார் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலர் காணாமல் போனதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வரி உயர்வு எப்போது? - அமைச்சர் விளக்கம்: தமிழகத்தில் இப்போதே வரி உயரும் என யாரேனும் கனவு கண்டால் அதற்கு பதில் கூறமுடியாது என
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்திருக்கிறார்.

பேருந்து கட்டண உயர்வு இல்லை: தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர்
ராஜகண்ணப்பன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் எதிர்க்கட்சிகள் பேரணி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தினர். அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டதற்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்: காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அழுத்தத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதிமுகவில் சட்ட ஆலோசனைக்குழு அமைப்பு: அதிமுகவில் 6 பேர் கொண்ட சட்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள குழு உருவாக்கப்பட்டிருப்பதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை: டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறது. அதிமுக
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர்களை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை தாக்குதலில் மீனவர் காயம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களை இலங்கை விரட்டியடித்தது. தாக்குதலில்
மீனவர் தலையில் காயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சங்ககால செங்கல் கால்வாய் கண்டுபிடிப்பு: புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் சங்ககால செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்துக்கு இணையான நகரம் இருந்ததற்கான ஆதாரம் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

யானைகள் தினத்தில் சோகம்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. சர்வதேச யானைகள் தினத்தில் இந்த
சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெண் என்பதால் தடுப்பதா?- உயர்நீதிமன்றம் கேள்வி: பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவிடாமல் தடுப்பதா? என போலந்தில் நடக்கும் தடகளப் போட்டியில் பங்கேற்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனுமதி மறுப்பதாக வீராங்கனை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

காப்பீடு திட்டம் - கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றம்: முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தினசரி அடிப்படையில் இருந்த கட்டணம், தொகுப்பு முறையில் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி: இந்தியாவின் ஜிஎஸ்எல்வி F-10 ராக்கெட் பயணம் தோல்வியில் முடிந்தது. வெற்றிகரமாக புறப்பட்ட
நிலையில் கிரியோஜெனிக் என்ஜின் பகுதியில் கோளாறு ஏற்பட்டது.

இரண்டாக உடைந்த சரக்கு கப்பல்: ஜப்பானில் தரை தட்டியதால் சரக்கு கப்பல் இரண்டாக உடைந்தது. எண்ணெய் வெளியேறுவதால் கடல் வாழ்
உயிரினங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com