\
போர்களத்தில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்: வரவேற்பு கொடுத்த அமைச்சர்

போர்களத்தில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்: வரவேற்பு கொடுத்த அமைச்சர்

போர்களத்தில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்: வரவேற்பு கொடுத்த அமைச்சர்
Published on: 

உக்ரைனிலிருந்து பத்திரமாக சென்னை திரும்பிய தமிழக மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.

உக்ரைனிலிருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ருமேனியாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் முதல்கட்டமாக வந்த தமிழக மாணவர்கள் நேற்றிரவு டெல்லி திரும்பினர். டெல்லியிலிருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த ஹரிஹர சுதன், சகீர் அபுபக்கர், சேலத்தைச் சேர்ந்த சாந்தனு பூபாலன், தேனியைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, அறந்தாங்கியைச் சேர்ந்த செல்வபிரியா ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து போர்த்தியும் வரவேற்றார். மாணவர்களின் பெற்றோரும் வரவேற்பு அளித்தனர். இரண்டாவது விமானம் மூலம் நள்ளிரவு தாயகம் திரும்பிய மேலும் 12 தமிழக மாணவர்களும் சென்னை வருகை தர உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com