தமிழ்நாடு
தீபாவளி: ‘உத்தரவை மீறினால் நடவடிக்கை’ - தமிழக அரசு எச்சரிக்கை
தீபாவளி: ‘உத்தரவை மீறினால் நடவடிக்கை’ - தமிழக அரசு எச்சரிக்கை
சரவெடி, ரசாயனம் கலந்த பட்டாசுகளுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள், சரவெடி போன்றவற்றை தயாரிக்க, விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, வெடிக்கவோ வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மீறினால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.