தமிழ்நாடு
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை: தமிழக அரசு
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை: தமிழக அரசு
தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் மரணம் குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிராமணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வறட்சி காரணமாக தமிழக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. 30 விவசாயிகள் தங்களது குடும்பப் பிரச்னைகளால் தற்கொலை செய்து கொண்டனர். மற்றவர்கள் உடல்நலக் குறைவு, வயது முதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தனர். அவ்வாறு மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரணநிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் வீதம் ரூ.2.46 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்தத் தகலவல்களுக்கு விவசாய சங்கத்தினர் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.