காவிரி தெரியும்.. தெலுங்கு கங்கை தெரியுமா ?

காவிரி தெரியும்.. தெலுங்கு கங்கை தெரியுமா ?
காவிரி தெரியும்.. தெலுங்கு கங்கை தெரியுமா ?
Published on

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டாலே தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துவிடும். தமிழகத்தில் போதிய பருவமழை பெய்யாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழகம் பெரிதும் அண்டை மாநிலங்களில் இருந்து கிடைக்கும் நீரையே நம்பி இருக்கிறது. காவிரி நீரை நம்பி டெல்டா பகுதி மக்கள் இருக்கிறார்கள். சென்னைவாசிகள் கிருஷ்ணா நதி நீரை நம்பி இருக்கிறார்கள். காவிரி விவகாரம் பூதாகரமாகி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு தீர்ப்பும் வந்துவிட்டது. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்கவில்லை. அண்டை மாநிலமான கர்நாடகமும் இவ்விவகாரத்தில் முரண்டு பிடிக்கிறது. 

இது இவ்வாறு இருக்க தமிழகத்துக்கு மேலும் ஒரு சிக்கல் வந்துள்ளது. சென்னை குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  தெலுங்கு கங்கா ஒப்பந்தத்தின் படி தமிழகத்திற்கு நீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீருக்காக தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும், ஆந்திர முதல்வர் என்.டி.ஆரும் 1983ல் “தெலுங்கு கங்கை திட்டம்” என்ற ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர். 

இதன்படி ஸ்ரீசைலம் அணையில் இருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை புதிதாக கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வருவது தான் இத்திட்டம். இத்திட்டத்தின் படி மொத்தம் 406 கிமீ தூரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டு பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சென்னையின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இத்திட்டத்தின் படி ஆண்டுக்கு 12 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும் என்பது ஒப்பந்தம். 

இந்நிலையில் ஆந்திர அரசு தற்போது 2.3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தர முடியும் எனத் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இருந்து தெலங்கான தனி மாநிலமாக பிரிந்ததால் மீதி நீரை தெலங்கானாவுக்கு தரவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கிடையே கையெழுத்தானது.ஒப்பந்தத்தின் படி 15டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.


கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வரும்போது ஆந்திர விவசாயிகள் கால்வாய்களில் வரும் நீரை மோட்டர் மூலமாக உறிஞ்சுவதாக குற்றச்சாட்டு உள்ளது.ஒவ்வொரு முறையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை கண்டறிந்து அம்மாநில அதிகாரிகளுடன் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண்பர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com