தமிழ்நாடு
செப்- 24 முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
செப்- 24 முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டெம்பர் 24ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன. வேலைநிறுத்தம் தொடர்பான நோட்டீசும் போக்குவரத்துத்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கும் தொழிலாளர்கள், அதுகுறித்து அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என கூறுகின்றனர்.
நிரந்தர தீர்வு காணும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கும்பட்சத்தில் போராட்டத்தை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.