சுகாதாரத் துறையில் தமிழகம் பின்னடைவு.... காரணம் இதுதான்..!

சுகாதாரத் துறையில் தமிழகம் பின்னடைவு.... காரணம் இதுதான்..!

சுகாதாரத் துறையில் தமிழகம் பின்னடைவு.... காரணம் இதுதான்..!
Published on

சுகாதார துறையில் தமிழகம் பின்தங்கியதற்கான ஒரு சில காரணங்களை குறிப்பிட்டு மருத்துவர் திவ்யா தனஞ்செயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுகாதார துறையில் சிறப்பாக இயங்கும் மாநிலங்களை நிதி ஆயோக் பட்டியலிட்டு வருகிறது. கடந்த ஆண்டு, முதல் முறையாக வெளியிடப்பட்ட இந்த தரவரிசை பட்டியலில், சுகாதார துறையில் சிறப்பாக விளங்கும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தது. ‌இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் மூ‌ன்றாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்துக்கு பின் தங்கியுள்ளது. சிறப்பான சுகாதாரத்தை பேணும் பெரிய மாநிலங்கள் வரிசையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கேரளா முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் சுகாதாரத் துறையில் தமிழகம் பின்தங்கியதற்கான ஒரு சில காரணத்தை குறிப்பிட்டு மருத்துவர் திவ்யா தனஞ்செயன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

குழந்தைகளுக்கு இலவச அத்தியாவசிய தடுப்பு ஊசிகள் வழங்குவதில் 7 புள்ளிகள் குறைந்துள்ளோம்.

மருத்துவமனை பிரசவங்கள் குறைந்திருக்கிறது. அதாவது வீட்டிலிருந்தே சுக பிரசவம் செய்யலாம் என்ற தவறான மனப்போக்கு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

அடிப்படை வசதிகள் கொண்ட தரமான சுகாதார மையங்களின் விகிதம் குறைந்துள்ளது.

எடை குறைவாக ஆரோக்கியமற்று பிறக்கும் குழந்தைகளின் விகிதம் அதிகரித்துள்ளது. அதாவது இரும்பு மாத்திரை சாப்பிட்டால் குழந்தையை பாதித்துவிடும் எனும் புரளிகளை நம்பி சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரிகளின் பணியிடங்கள் அதிகரிப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com