பத்திரப் பதிவுக்கு அதிகக் கட்டணம்: இந்திய அளவில் தமிழகம் 2ஆவது இடம் 

பத்திரப் பதிவுக்கு அதிகக் கட்டணம்: இந்திய அளவில் தமிழகம் 2ஆவது இடம் 
பத்திரப் பதிவுக்கு அதிகக் கட்டணம்: இந்திய அளவில் தமிழகம் 2ஆவது இடம் 

முத்திரைத்தாள் வரி மற்றும் பத்திரப் பதிவிற்காக அதிகக் கட்டணம் வசூலிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில்
உள்ளது.

முத்திரைத்தாள் வரி மற்றும் பத்திரப் பதிவுக்கான கட்டணம் பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பது சட்டப்பேரவையில்
தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்களில் மூலம் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக முத்திரைத் தாள் வரி மற்றும்
பத்திரப் பதிவிற்கு 16 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இரண்டாவதாக தமிழ்நா‌ட்டில் 11 சதவிகிதமும், கேரளாவில் 10 சதவிகிதமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில்
ஆண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ய முத்திரை தாள் வரியுடன் கூடிய கட்டணம் 10 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத் தாள் வரிக் கட்டணம் 9 புள்ளி 5 சதவிகிதமாக இருக்கிறது. 

நமது அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 7 சதவிகிதமும், கர்நாடகாவில் 6 புள்ளி 6 சதவிகிதமும், தெலங்கானாவில் 6 சதவிகிதமும்
கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அஸ்ஸாம், ஹிமாச்சலப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத் தாள்
கட்டணம் 5 சதவிகிதத்திற்குள்ளேயே இருக்கிறது.

பத்திர‌ப் பதிவு மற்றும் முத்திரைத் தாள் கட்டணம் மூலம் கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கு 21 சதவிகிதம் வருவாய் அதிகமாகக்
கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, டாஸ்மாக்கிற்கு அடுத்தபடியாக, பத்திரப் பதிவில்தான் அரசுக்கு வருவாய்
அதிகரித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com