மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக-வில் யார், யாருக்கு வாய்ப்பு?

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக-வில் யார், யாருக்கு வாய்ப்பு?
மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக-வில் யார், யாருக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இதில் அதிமுக, திமுக சார்பில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் கே.அர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், மைத்ரேயன், ரத்னவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, திமுக சார்பில் கனிமொழி தேர்வு செய்யப்பட்டனர்.
கனிமொழி, பதவி காலம் முடிவடையும் முன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாகியுள்ளன. இதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற் கான கடைசி தேதி, ஜூலை 8 ஆகும். வேட்பு மனு பரிசீலனை 9 ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற 11 ஆம் தேதி கடைசி நாள்.

இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுக சார்பில் யார், யார் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மாநிலங்களவை எம்பியை தேர்ந்தெடுக்க 39 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் அதிமுகவுக்கு சட்டப்பேரவையில் தற்போது 123 எம்எல்ஏக்கள் உள்ளனர். 39 வாக்குகளுக்கு ஒரு எம்பி என்கிற
அடிப்படையில் அதிமுகவின் சார்பில் 3 எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. 

திமுகவை பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து சட்டப்பேரவையில் 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். இரண்டு எம்பிக்களுக்கு தேவையான ஆதரவு உள்ள நிலையில், மூன்றாவது எம்பியை தேர்ந்தெடுக்க 9 எம்எல்ஏக்கள் குறைகிறது. எனினும் போட்டி என வரும்போது அதிக எம்எல்ஏக்களை கொண்டிருப்பதால் திமுகவிற்கு மூன்றாவது எம்பியும் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அதனால் அதிமுக மற்றும் திமுகவின் சார்பில் தலா மூன்று எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

அதிமுக, ஒரு எம்பி பதவியை பாமகவுக்கு தருவதாக ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளது. அதில் அன்புமணி தேர்ந்தெடுக்கப் படுகிறார். மற்ற இரண்டு எம்பி பதவிகளுக்கு தம்பிதுரை, அன்வர் ராஜா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன. மேலும், மனோஜ் பாண்டியன், கே.பி. முனுசாமி, கோகுல இந்திரா ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

திமுக, ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை மதிமுகவுக்கு தருவதாக ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது. அதில் வைகோ தேர்ந்தெடுக்கப்படுகிறார். மற்ற 2 பதவிக்கு வழக்கறிஞர் வில்சன், தொமுசவின் சண்முகம் ஆகியோருக்கு வாய்ப்பிருப்பதாக
கூறப்படுகிறது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்புக்கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருப் பதாகவும் அதனால் அந்த சமூகத்தில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com