நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகளால் தமிழக அரசியல் சூடி பிடித்துள்ள நிலையில், அதையொட்டி வெளியாகும் மீம்ஸ்களோ பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் சில மாதங்களில் வரவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், தேர்தல் ஆணையமும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேசமயம் மற்றொரு புறம் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் அதைவிட தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உலக முழுவதும் ஆக்கிரமித்துள்ள சமூல வலைத்தளங்களை ஆட்சி செய்வது மீம்ஸ்கள் என்றால் அது மிகையாகாது. விளையாட்டு, சினிமா, அரசியல் என எதையும் ஒரே ஒரு மீம்ஸால் கிண்டல் அடித்துவிட முடியும். முதல்வர் முதல் பிரதமர் வரை யாரையும் விட்டுவைக்காத ஒரு களம் மீம்ஸ் உலகம்தான். இங்கு யாருக்கும் பாரபட்சம் என்பது கிடையாது. இதனை அறிந்துகொண்ட அரசியல் கட்சிகள் இதற்காக தங்கள் தொழில்நுட்பப் பிரிவு அணியில், மீம்ஸ் குழு என்ற ஒரு தனிக்குழுவையே நடத்தி வருகின்றன.
இப்படி இருக்கையில், தற்போது தமிழகத்தில் பரபரப்பாக இருக்கும் நாடாளுமன்றக் கூட்டணிகள் குறித்தும் பல மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
அதிமுக-பாஜக கூட்டணியை வைத்து வெளியாகவுள்ள ஒரு மீம்ஸில், “மைடியர் மச்சான்” சாங்கை குறிப்பிட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பாஜக மற்றும் பாமக இரண்டிற்கும் அதிமுக ஆதரவு அளிப்பது போல, ‘காதல் தேசம்’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டணி நேரத்தில் ஸ்டாலின் தனது காங்கிரஸ் ஃபீலிங்க்ஸுடன் நினைக்கும், ‘ராஜா ராணி’ கிளைமேக்ஸ் மீம்ஸாக்கப்பட்டுள்ளது.
இன்னொரு மீம்ஸில் இரட்டையில், தாமரைப்பூ மீது, மாம்பழம் பழுத்திருக்கும்படி உள்ளது.
‘இந்தியன்’ படத்தின் ‘பச்சைக்கிளிகள் தோளோடு” பாட்டை குறிப்பிட்டு, திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்யும் மீம்ஸ் இடம்பெற்றுள்ளது.
‘பசங்க’ படத்தின் ஒரு காட்சி டிடிவி தினகரன், வெற்றிவேல் மற்றும் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு மீம்ஸ் ஆக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் மரத்தில் அமர்ந்து ஒருவருக்கொருவர் கிளைகளை வெட்டும் காட்சி, அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக கூட்டணிக்கும், அதே படம் திமுக-காங்கிரஸ்-மதிமுக-விசிக கூட்டணிக்கும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில மீம்ஸ்களும், சித்தரிக்கப்பட்டுள்ளன.