“அவங்களுக்கு கொடுக்குறாங்க” கடைசிநேரத்தில் கைவிரித்த தேர்தல் ஆணையம்! விரக்தியில் விசிக,நாதக,மதிமுக!

INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகள் கேட்ட சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் கோரிய சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.
விசிக - நாதக - மதிமுக
விசிக - நாதக - மதிமுக முகநூல்

மதிமுக

INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகள் கேட்ட சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் கோரிய சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

திமுக கூட்டணியில் 2019 மக்களவைத் தேர்தலில் களம் கண்ட மதிமுக, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. தற்போது, திருச்சி தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது என உறுதியாக இருந்தது. திமுக தரப்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் கொடுக்கப்பட்டபோதும், தனிச்சின்னத்தில்தான் போட்டி என துரை வைகோ ஆவேசமாக கூறினார்.

பம்பரம் - மதிமுக
பம்பரம் - மதிமுகமுகநூல்

மதிமுகவின் பம்பரம் சின்னத்தை மனதில் வைத்தே துரை வைகோ இவ்வாறு பேசியிருந்தார். ஆனால், அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படவில்லை. வைகோ தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பம்பரம் சின்னத்தை மதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது என உத்தரவிட்டது. இதனை அடுத்து, சிலிண்டர் அல்லது தீப்பெட்டி சின்னம் வழங்க மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

விசிக - நாதக - மதிமுக
குஜராத்: கைகோர்த்த ஆம் ஆத்மி - காங்கிரஸ்.. பாஜகவை வீழ்த்த வியூகம்!

விசிக

INDIA கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவிற்கும் இதேநிலைமை தான். 6 மாநிலங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ள அந்த கட்சி தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் களமிறங்குகிறது. கடந்த முறை வழங்கிய பானை சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது விசிக. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், விசிகவிற்கு பானை சின்னம் வழங்க முடியாது எனக் கூறியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன்pt web

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். எதிரணியில் இருப்பவர்களுக்கு கேட்ட சின்னங்களை ஒதுக்காமல் இழுத்தடிக்கிறது அல்லது மறுக்கிறது. தேர்தல் ஆணையமே இவ்வாறு ஒருதலைப் பட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தல் நடத்தப்பட்டால் தான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். எனவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல், ஆளும் கட்சி சார்பில்லாமல் நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

திருமாவளவனின் குற்றச்சாட்டிற்கு காரணம் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் களமிறங்கும் தமாகா, அமமுக ஆகிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னம் வழங்கப்பட்டதுதான். 3 தொகுதிகளில் போட்டியிடும் தமாகாவிற்கு சைக்கிள் சின்னமும், 2 தொகுதிகளில் களமிறங்கும் அமமுகவிற்கு குக்கர் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

விசிக - நாதக - மதிமுக
“வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது" - மத்திய அரசின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு!

NDA கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னங்கள் 

கடந்த மக்களவை தேர்தலை அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே தமாகா போட்டியிட்டது. இதேபோல், தனித்து களம் கண்ட அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஜிகே வாசன்
ஜிகே வாசன்pt web

INDIA கூட்டணி கட்சிகளுக்கு, கேட்ட சின்னம் ஒதுக்கப்படாத அதேநேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை கேட்ட சின்னம் கிடைத்திருப்பதே இந்த குற்றச்சாட்டிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட, “இதை ஜனநாயக நாடு என நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. வார்த்தைகளில் மட்டும்தான் ஜனநாயகம் உள்ளது. ஆபத்தானவர்கள் இவர்கள். கரும்பு விவசாயி சின்னத்தை கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டோம். விவசாயி சின்னம் எங்கள் வாழ்வியலோடு தொடர்புடையதால் அதை மீட்பதற்காக போராடினோம். 2026ல் அந்த சின்னம் வராமல் போய்விடுமா என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com