கூட்டம் கூடி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை

கூட்டம் கூடி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை

கூட்டம் கூடி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை
Published on

தமிழகத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிற அமைப்பினரைப் போல் தங்களை பாவித்துக் கொண்டு பெருந்திரளாக கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதுடன், மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ இடையூறாக இருக்கும் என்பதால் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென தமிழக காவல்துறை கேட்டுக் கொள்கிறது.

இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/WIxTSssSgtY" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com