பன்னாட்டு பானங்களை அருந்த மறுப்பு: உறுதிமொழி எடுத்த மக்கள்

பன்னாட்டு பானங்களை அருந்த மறுப்பு: உறுதிமொழி எடுத்த மக்கள்

பன்னாட்டு பானங்களை அருந்த மறுப்பு: உறுதிமொழி எடுத்த மக்கள்
Published on

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம், பன்னாட்டு குளிர்பானங்களை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு கதவையும் திறந்து வைத்துள்ளது. பன்னாட்டு குளிர்பாங்கள் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பிரபலங்களும் ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக தமிழக மக்கள் பன்னாட்டு குளிர் பானங்களுக்கு எதிராகவும் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நாமக்கல் பூங்காவில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடிய பொதுமக்கள், பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறி தரையில் ஊற்றி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

கோவை பந்தய சாலை பகுதியில் நடந்த போராட்டத்தில் பொதுமக்கள், கோக், பெப்சி உள்ளிட்ட பன்னாட்டு பானங்களை வீதியில் கொட்டி கோஷங்கள் எழுப்பினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com