“கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டும்”- சிறப்பு வழிபாடு செய்த துளசேந்திரபுரம் மக்கள்

“கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டும்”- சிறப்பு வழிபாடு செய்த துளசேந்திரபுரம் மக்கள்
“கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டும்”- சிறப்பு வழிபாடு செய்த துளசேந்திரபுரம் மக்கள்

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என தமிழக மக்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. அதில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ்(55) போட்டியிடுகிறார். இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

கமலா ஹாரிஸ் சட்டப்படிப்பு பயின்றவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிஃபோர்னியாவில் அட்டார்னியாகவும், தற்போது கலிபோர்னியாவில் ஷெனட்டராகவும் பதவி வகித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் போட்டியிடுகிறார் .
இதன் மூலம் பைங்காநாடு கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் நாளை எதிர்பார்த்திருப்பதாகவும் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும், துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் 2014 ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளதாக தெரிவிக்கும் கிராம மக்கள், அவர் அமெரிக்க துணை அதிபராக வேண்டும் என அவரது குலதெய்வக் கோயிலான தர்ம சாஸ்தா அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com