தவெக கூட்டணி
தவெக கூட்டணிமுகநூல்

”திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது” - விஜய்யின் தவெக கூட்டணியில் இணைந்த முஸ்தபா! பின்னணி என்ன?

தவெக கூட்டணியில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி இணைந்திருப்பது தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Published on

தமிழக அரசியலில் களமிறங்கியிருக்கும் விஜய், தனது முதல் மாநாட்டிலேயே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், கொள்கை ரீதியாக பாஜகவை எதிரியாகவும், அரசியல் ரீதியாக திமுகவை தனது எதிரியாகவும் தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் பேசுபொருளாக மாறியது. மேலும், மாவட்ட நிர்வாகிகள், தவெக அணிகள் என கட்சி பணிகளில் தொடர்ந்து தீவிரமும் காட்டி வருகிறார்.

ஒருபுறம், விஜய் இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை என்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பலம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி வரும் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் நெருங்கும் போது கூட்டணிக் குறித்து பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜனா, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கூட்டணியில் இணையும் என்றும் அறிவித்துள்ளார். இதன்மூலம், தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் முதல் கட்சியாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெக கூட்டணி
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் ஆதரவு - ஆனந்த் - முஸ்தபா சந்திப்பு

மேலும், தவெகவின் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் என்று தற்போது முஸ்தபா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “ தவெகவில் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறார் விஜய். மாநில கட்சி மட்டுமல்ல தேசிய கட்சிகளில்கூட இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது கிடையாது. சிஏஏ சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்று கூறி இஸ்லாமியர்களின் பக்கம் நின்றவர் விஜய்.

தவெகவுக்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது. அற்ப செயல்களில் ஈடுபடுவதை திமுக நிறுத்திக்கொள்வது நல்லது. வாக்கு வங்கிக்காக சிலர் முலம் இஸ்லாமியர்களை திசை திருப்ப சதி செய்கிறது திமுக. “ என்று தெரிவித்துள்ளார்.

தவெக கூட்டணி
திண்டுக்கல் | ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோயில் திருவிழாவில் பரிமாறப்பட்ட கமகம கறிவிருந்து

தவெக கூட்டணியில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி இணைந்திருப்பது தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com