தலைமை செயலகத்தில் செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் 3 மணிநேரம் ரெய்டு: சோதனையின்போது வெளியான தகவல்கள்!

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது சோதனையின்போது வெளியான தகவல்கள் எவை என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடைய அலுவலகத்தில் இன்று காலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினர் 3 மணிநேரம் சோதனை செய்தனர்.

பகல் 1 மணி அளவில் தலைமைச் செயலகத்துக்கு 3 அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்தியன் வங்கி அதிகாரிகள் இருவரும் வந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறைக்கு வந்த அவர்கள், அமைச்சர் அமரும் பிரதான அறையிலும், உதவியாளர்கள் அமரும் இரண்டாவது அறையிலும் பல்வேறு ஆவணங்களை எடுத்து சோதனையிட்டனர். மாலை நான்கரை மணி அளவில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி மட்டும் புறப்பட்டுச் சென்ற நிலையில் மற்ற அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையின்போது வெளியான தகவல்கள் எவை என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com