
புதுக்கோட்டை காமராஜபுரம் நகராட்சி பள்ளி பெருமாள் கோயில் அருகே உள்ள ராணியார் பள்ளி, பேரங்குளம் அண்ணா நகர் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவேற்ற முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்...
”அண்ணாமலை ஆளுநரிடம் எத்தனை பட்டியல் வேண்டுமானாலும் கொடுக்கட்டும், எது வந்தாலும் திமுகவும் திமுக அமைச்சர்களும் சந்திக்க தயாராக உள்ளோம், இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் சொல்லிவிட்டோம் திரும்பத் திரும்ப அது குறித்து சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
அண்ணாமலை அரசியல் பண்ணுவதற்காக நடைபயணம் மேற்கொள்கிறார் அவ்வளது தான், இதனால் எந்த விதமான அரசியல் மாற்றமும் ஏற்படாது, அவருக்கு வேண்டுமானால் கால் வலிக்கும், ராகுல் காந்தி நடைபயணத்தில் எழுச்சி இருந்தது, அண்ணாமலை நடை பயணத்தில் அப்படியான எழுச்சி இருக்காது. இவர்களாக மக்களை கூட்டிச் சென்றால்தானே தவிர ராகுல் காந்தி நடைபயணம் சென்றது போல் எழுச்சி இவர்களால் காட்ட முடியாது” என்று கூறினார்.