\
தமிழக மருத்துவ மாணவர், பேராசிரியர் வெஸ்ட் இண்டீஸில் பரிதாப பலி!

தமிழக மருத்துவ மாணவர், பேராசிரியர் வெஸ்ட் இண்டீஸில் பரிதாப பலி!

தமிழக மருத்துவ மாணவர், பேராசிரியர் வெஸ்ட் இண்டீஸில் பரிதாப பலி!
Published on

மேற்கு இந்திய தீவு நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவரும், பேராசிரியரும் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற பெங்களூரு மாணவியும் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரது மகன் புவன கங்கேஸ்வரன். மேற்கு இந்திய தீவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து புவன கங்கேஸ்வரன் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு சக மாணவ‌ர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென ராட்சத அலை எழுந்தது. இதில் கங்கேஸ்வரன், அவருடன் இருந்த பெங்களூருவை சேர்ந்த இந்துமதி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பூபதி ஆகியோர் அடித்துச் செல்லப்பட்டனர். சிறிது நேரத்திலேயே அவர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மகனின் மறைவு செய்தி கேட்ட கங்காதரன் குடும்பத்தினர். புவன கங்கேஸ்வரனின் உடலை சொந்த ஊர் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் எ‌ன கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com