\
சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் கொரோனா வார்டில் அனுமதி

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் கொரோனா வார்டில் அனுமதி

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் கொரோனா வார்டில் அனுமதி
Published on

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய காரைக்குடியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வார்டில் வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரைக்குடி பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். வயது 47. இவர் சிங்கப்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சமையல்காரராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்துள்ளார். இதனிடையே சந்திரனுக்கு தொடர் இருமல், சளி பாதிப்பு இருந்ததால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காரைக்குடி அரசு மருத்துவர்கள், மதுரை அரசு மருத்துவமனக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியதால், சந்திரன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஹேமந்த் குமார் கூறும்போது, சந்திரனுக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு சென்னைக்கு அந்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் சந்திரன் வெளிநாட்டில் இருந்து வந்ததாலும், அவருக்கு தொடர் இருமல் சளி பாதிப்பு இருப்பதால் கொரோனா வார்டில் வைத்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com