டாப் 10 தேர்தல் களம்: ஸ்டாலினின் புதிய பரப்புரை வியூகம் முதல் ஸ்மிருதி இரானி சவால் வரை

டாப் 10 தேர்தல் களம்: ஸ்டாலினின் புதிய பரப்புரை வியூகம் முதல் ஸ்மிருதி இரானி சவால் வரை
டாப் 10 தேர்தல் களம்: ஸ்டாலினின் புதிய பரப்புரை வியூகம் முதல் ஸ்மிருதி இரானி சவால் வரை

* கருத்துக்கணிப்பில் தற்போது பிரதான கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது. தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு சீமானுக்கு 4.93% பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். விரிவாக வாசிக்க > பிரதான கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர்: கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

* கோவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  விரிவாக வாசிக்க > வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மோட்டார் சைக்கிளில் ஸ்மிருதி இரானி வாக்கு சேகரிப்பு

* தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் லட்சிய திமுக யாருக்கும் ஆதரவில்லை என அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > காலமும், களமும் சரியில்லை; தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: டி.ராஜேந்தர்

* பிரச்சாரத்தின்போது ஐ.லியோனி சொன்ன உதாரணத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க >  பெண்கள் குறித்த ஐ.லியோனி பேச்சு: வருத்தம் தெரிவித்த திமுக வேட்பாளர்

* தமிழகத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் கருத்து கணிப்புகளை பொய்யாக்கிவிட்டு மீண்டும் ஆட்சியமைக்கும் என பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார். விரிவாக வாசிக்க > கருத்துகணிப்பு பொய் ஆகும்; அதிமுக கூட்டணி வெல்லும்: ஜே.பி.நட்டா சிறப்புப் பேட்டி

* கமல்ஹாசன் வானதி சீனிவாசனுடன் நேரடியாக விவாதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > வானதியுடன் நேரடி விவாதத்திற்கு கமல் தயாரா? - ஸ்மிருதி இரானி கேள்வி

* தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. விரிவாக வாசிக்க > வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

* துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் கார்த்திக்  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். விரிவாக வாசிக்க > “ஓபிஎஸ் வெற்றி பெற மீண்டும் வாக்களியுங்கள்”-நடிகர் கார்த்திக் தேர்தல் பரப்புரை

* கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பரப்புரை பயணத்திட்டம் இந்த தேர்தலில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எதனால் இந்த யுக்தி ? விரிவாக வாசிக்க > மு.க.ஸ்டாலினின் புதிய பரப்புரை வியூகம்... வாக்காளர்களை ஈர்க்கிறதா? - ஓர் அலசல்

* அரவக்குறிச்சி அமமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன் இரண்டு பிரதான கட்சிகளும் அரசு கஜானாவை கொள்ளையடிப்பதில் ருசி கண்ட பூனைகள் என விமர்சித்தார். விரிவாக வாசிக்க > அரசு கஜானாவை கொள்ளையடிப்பதில் அதிமுக, திமுக ருசி கண்ட பூனைகள் - டிடிவி தினகரன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com