இவ்வளவு கலர், கலரா வகை, வகையா பட்டங்களா!.. மாமல்லபுரம் சர்வதேச விழாவில் குவிந்த மக்கள்

இவ்வளவு கலர், கலரா வகை, வகையா பட்டங்களா!.. மாமல்லபுரம் சர்வதேச விழாவில் குவிந்த மக்கள்
இவ்வளவு கலர், கலரா வகை, வகையா பட்டங்களா!.. மாமல்லபுரம் சர்வதேச விழாவில் குவிந்த மக்கள்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை பார்க்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் முதல்முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று தொடங்கிய பட்டம் விடும் திருவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், இத்திருவிழாவில் தேசியக்கொடி வடிவிலான பட்டம், திருவள்ளுவர் மற்றும் விநாயகர் வடிவிலான பட்டம், பறவைகள் மற்றும் விலங்குகள் வடிவிலான பட்டம், மேலும் குழந்தைகளை கவரும் விதமாக பொம்மைகள் வடிவிலான பட்டம், பாண்டா அவெஞ்சர், பல்லி,குதிரை, வடிவத்தில் பட்டங்கள் என பல்வேறு விதமான வண்ணவண்ண பட்டங்கள் விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இந்நிலையில் அந்த பட்டங்கள் அனைத்தும் வானில் விடபட்டதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

பட்டம் விடும் திருவிழாவை பார்வையிட்ட பொதுமக்கள் அளித்த பேட்டியில் முதல் முறையாக இது போன்ற பட்டம் விடும் திருவிழாவை நேரில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தனர், இருப்பினும் வெயிலில் அமர்ந்து பார்ப்பது கடினமாக இருப்பதால் அடுத்த முறை இதற்கு வழி வகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

பட்டம் விடும் திருவிழாவில் 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு நேரில் பார்வையிட இலவசமாகவும் மற்றவர்களுக்கு 150 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் மாலை 6 மணிக்கு பிறகு சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை பார்க்க வந்த பார்வையாளர்களை கவரும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூலம் மாமல்லபுரம் திருவிழா போல் காட்சியளித்த நிலையில், இப்போது சர்வதேச பட்டம் விடும்  திருவிழாவால் மீண்டும் மாமல்லபுரம் களைகட்டி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com