ராமர் பிரதிஷ்டை: தமிழக கோவில்களில் அன்னதானம், பூஜைக்கு தடையா? இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்!

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வை ஒட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் செய்யப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் - அமைச்சர் சேகர் பாபு
அயோத்தி ராமர் கோயில் - அமைச்சர் சேகர் பாபுபுதிய தலைமுறை

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் கலந்துகொள்ள அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், உச்சநீதிமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் என பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பலரும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். மக்களும் பெருமளவில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்pm modi

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வை ஒட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் செய்யப்படுவதற்கு திமுக அரசு தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது” என இன்று காலை தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாளைய தினம் அயோத்தியில் ஸ்ரீராமர் திருவுருவச் சிலை, பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மத சார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்து மத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் அன்னதானத்திற்க்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுமட்டுமின்றி, ஸ்ரீராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழகக் கோவில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையுமில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான ஆலய வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்ப மாட்டார்கள். யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது திமுக அரசு?

அயோத்தி ராமர் கோயில் - அமைச்சர் சேகர் பாபு
சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திமுகவின் தடையை மீறி, அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவுக்காக, தமிழகக் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியிருந்தார்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்கோப்புப் படம்

தொடர்ந்து இதுபோன்ற விமர்சனங்களை அடுத்து, “தமிழ்நாட்டின் ராமர் கோவில்களில் அன்னதானம் சிறப்பு பூஜைக்கு தமிழக அரசு தடை என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அப்படியான எந்த அறிவிப்பும் அரசுத்தரப்பில் வெளியிடப்படவில்லை” என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அயோத்தி ராமர் கோயில் - அமைச்சர் சேகர் பாபு
தமிழ்நாடு ராமர் கோவில்களில் தடையா? நிர்மலா சீதாராமன் Vs சேகர்பாபு இடையே தொடரும் ட்விட் மோதல்!

மேலும் இந்துசமய அறநிலையத்துறை தரப்பில், “பண்டிகைகளின்போது அந்தப் பகுதியில் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் நாளை அன்னதானம் வழங்கலாம். அதேநேரம், கோயில்களுக்கு வெளியே அனுமதி பெற்ற பிறகே சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும்.

மற்றபடி கோயில்களில் பூஜை நடத்தவும் அன்னதானம் வழங்கவும் தடையில்லை. இதுதொடர்பாக உண்மைக்கு புறம்பாக செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com