வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
வெளிமாநிலத்தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக தொழிலாளர் உதவி ஆணையா் தெரிவித்துள்ளார். கொரோனா 2 ஆவது அலையால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி பணியாற்ற உகந்த சூழ்நிலையை உருவாக்கவும், அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச்செல்லாமலும் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்க ஏதுவாக தொழிலாளா் நலத் துறையில் தனியாக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் குறைகளை 044-24321438 அல்லது 044-24321408 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.