நல்லக்கண்ணுவுக்கு வீடு வழங்க அரசாணை

நல்லக்கண்ணுவுக்கு வீடு வழங்க அரசாணை

நல்லக்கண்ணுவுக்கு வீடு வழங்க அரசாணை
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வசிப்பதற்கு அரசு வீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 94 வயதான நல்லகண்ணு அவர்கள் அரசியலில் அனைத்துக்கட்டத் தரப்பு மக்களாலும் விரும்பப்படுபவர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சென்னை தியாகராயா நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய கட்டுமானத்திட்டம் வர இருந்ததால் அங்கு வசித்து வந்த அனைவரையும் அரசு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டது. இதனால் நல்லக்கண்ணுவும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை கே.கே நகரில் உள்ள வீட்டில் மாத வாடகைக்கு குடிபெயர்ந்தார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “சென்னை தி.நகரில் புதிய திட்டத்தை செயல்படுத்த இருபபதாகச் சொல்லி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அரசு வெளியேற்றியுள்ளது. இதனையடுத்து அவரும் எந்த வித கேள்வியும் கேட்காமல் வெளியேறியுள்ளார். அரசாங்கத்தை மதிக்கும் அவரது நற்பண்பு போற்றுதலுக்கு உரியது. அத்தகைய போற்றுதலுக்குரிய ஒரு தலைவரை உடனடியாக வெளியேற்றச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழகத் தேசிய முண்ணனி கட்சியின் தலைவர் பழ.நெடுமாறனும் அரசுக்கு எதிரான தனது கண்டனத்தை தெரிவித்தார். இதனையடுத்து இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் நல்லகண்ணுவை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதில் “தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் உங்களுக்கும் கக்கன் மகனுக்கு வீடு வழங்குவது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்கும்” என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நல்லக்கண்ணுவுக்கு குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com