\
நாளை சென்னை வருகிறார் ஆளுநர்

நாளை சென்னை வருகிறார் ஆளுநர்

நாளை சென்னை வருகிறார் ஆளுநர்
Published on: 

ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்.

அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக பதவி ஏற்ற சசிகலா நாளை மறுநாள் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என கூறப்பட்டது. சென்னை பல்கலைகழகத்தில் பதவியேற்பு விழாக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிலும் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில் தற்போது முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி அதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், திடீரென்று மும்பை சென்று அதன் பிறகு டெல்லி சென்றதால், திட்டமிட்டபடி சசிகலாவின் பதவி ஏற்பு விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்றார்போல், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த காவல்துறை பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டது.இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் பங்கேற்க இருந்த 2 நிகழ்ச்சிகள் ரத்து செய்து விட்டு நாளை சென்னை வருகிறார். இந்தத் தகவலை மும்பை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com