தண்ணீர் பிரச்னையால் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!
தண்ணீர் பிரச்னைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை என்று வெளியான தகவல் தவறானவை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. குடிநீருக்காக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளிலும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் கடந்த 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோதே, வெயில் மற்றும் தண்ணீர் பிரச்னை காரணமாக சில நாட்கள் கழித்து திறக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை அரசு ஏற்கவில்லை.
இந்நிலையில், தண்ணீர் பிரச்னை காரணமாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதைப் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை, அது வதந்திதான் என்றும் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு என்று தகவல் தந்தால் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும் என்றும்அவர் தெரிவித்துள்ளார்.
சில பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை இருப்பதாகவும் ஜூன் 17 ஆம் தேதி முதல் பள்ளிகளில் தண்ணீர் பிரச்னையை போக்க பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.