12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு
Published on

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை கணினிமயமாக்கல் எஸ்.பியாக இருந்த வருண்குமார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை ஏடிஜிபியாக(செயலாக்கம்) இருந்துவரும் ஏ.கே. விஸ்வநாதன், காவலர் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார், தீயணைப்புத் துறை டிஜிபியாக கரண் சின்கா ஐபிஎஸ், சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக சீமா அகர்வால், காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

12 அதிகாரிகளில் 3 பேருக்கு பதவி உயர்வும், 9 பேருக்கு பணியிடமாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com