“மின்கட்டண உயர்வு வீடுகளுக்கு இல்லை; ஆனால்...”- தமிழ்நாடு அரசு சொல்வதென்ன?

“தமிழ்நாட்டில் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை. வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கு குறைந்த அளவில் கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது” - தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு 13 காசுகள் முதல் 21 காசுகள் வரை மிகக்குறைந்த அளவில் கட்டணம் உயரும்.

tneb
tnebpt desk

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புக்கான கட்டணங்கள் குறைவாக இருக்கிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சார கட்டணம் உயர்த்தபட்ட நிலையில் அப்போது 2022 ஏப்ரல் மாதத்தின் விலைகுறீயீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலைகுறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கட்டண உயர்வின் அளவு 4.7 சதவிகிதத்திலிருந்து 2.18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் மக்களை பாதுகாக்கும் நோக்குடன், அத்தொகையையும் (வீட்டின் நுகர்வோர்க்கு) தமிழ்நாடு அரசு ஏற்குமென்றும், அத்தொகையை மின்வாரியத்திற்கு மானியமாக அரசே வழங்கும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின்கட்டணத்தை உயர்த மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், இந்த ஆண்டு உயர்த்தப்பட வேண்டிய 2.18 சதவிகித தொகையை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com