பொங்கல் திருவிழாவையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 7 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை முதலமைச்சர் வழங்கினார். பொங்கல் பண்டிகையையொட்டி ஏறத்தாழ ஒரு கோடியே 62 லட்சம் பேருக்கு 486 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக 7 மாணாக்கர்களுக்கு அவர் மிதிவண்டிகளை வழங்கினார். சுமார் 244 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.