\
ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
Published on: 

பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை மாநகர காவல் ஆணையராக தீபக் எம்.தமோர் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை காவல் ஆணையராக பணியாற்றி வந்த என்.பாஸ்கரன், சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை ஐஜியாக பணியாற்றி வந்த எம்.ரங்கராஜனை, சென்னை சிபிசிஐடி எ‌ஸ்பியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை சிபிசிஐடி எஸ்பியாக இருந்த நிஷா பார்த்திபன் பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக மாற்ற செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் எஸ்பி திஷா மிட்டல், திருப்பூர் மாவட்ட எஸ்பியாகவும், திருப்பூர் எஸ்பி கயல்விழி, உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல் படைப்பிரிவு கமாண்டன்ட்டாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com