\
ஞாயிற்றுக்கிழமையன்று தேர்வுகளுக்கு செல்ல அனுமதி - தமிழக அரசு

ஞாயிற்றுக்கிழமையன்று தேர்வுகளுக்கு செல்ல அனுமதி - தமிழக அரசு

ஞாயிற்றுக்கிழமையன்று தேர்வுகளுக்கு செல்ல அனுமதி - தமிழக அரசு
Published on

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதச் செல்வோருக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு அல்லது அழைப்புக்கடிதத்தை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான பிரதான தேர்வுகள் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com