\
திருவாரூரில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடமை - ஆட்சியர்

திருவாரூரில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடமை - ஆட்சியர்

திருவாரூரில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடமை - ஆட்சியர்
Published on

திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வெளியே வந்துள்ளனர். இதனிடையே ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்பின் படி சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com