தமிழ்நாடு
'தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழக அரசின் மாநிலப்பாடல்' - தமிழக அரசு அரசாணை
'தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழக அரசின் மாநிலப்பாடல்' - தமிழக அரசு அரசாணை
'தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழக அரசின் மாநிலப்பாடல்' என அறிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகையில் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும்போது இனி அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். இதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை, பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு வாய்மொழியில் சொந்த குரலோசையில் பாட வேண்டும். 55 விநாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றன் நடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.