\
வெளி மாநிலங்களிலிருந்து வணிக நோக்கில் வருவோருக்கு உடனடி இ பாஸ் - தமிழக அரசு

வெளி மாநிலங்களிலிருந்து வணிக நோக்கில் வருவோருக்கு உடனடி இ பாஸ் - தமிழக அரசு

வெளி மாநிலங்களிலிருந்து வணிக நோக்கில் வருவோருக்கு உடனடி இ பாஸ் - தமிழக அரசு
Published on: 

வணிக நோக்கில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் தொழிற் துறையினருக்கு இ பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட உத்தரவில் வெளி மாநிலங்களில் இருந்து வணிக நோக்கில் வருபவர்கள் 72 மணி நேரம் மட்டும் தங்குவதாக இருந்தால் இ பாஸ் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொழிற் துறையினர் தவிர விருந்தோம்பல், தகவல் தொழில் நுட்பம், பொழுதுபோக்கு, சட்டம் சார்ந்த துறையினருக்கும் இச்சலுகை வழங்கப்படும் என தனது உத்தரவில் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். தொழிற் துறை வளர்ச்சியை கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com