
சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும் பயிர்க் காப்பீட்டுக்கு தமிழக அரசு 522 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின்கீழ் இந்த நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக விவசாயத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் பயிர்க் கடன் சுமையை குறைக்க காப்பீடு வகை செய்கிறது. நடப்பாண்டான 2017 -18ஆம் ஆண்டில் இந்தப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 25 லட்சம் விவசாயிகள் பயன்பெறச் செய்யும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. நெல், வாழை உள்ளிட்ட 21 பயிர் வகைகளுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்றும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.