குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி சட்டப்பேரவையில் இன்று அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவியது. பலரும் இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினர். அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும், 'ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச்சட்டம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,  இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக்கோரும் அரசினர் தனித்தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

ஒன்றிய அரசு 2019ல் இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் மதச்சார்பின்மை கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கு உகந்ததாக இல்லை என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சி.ஏ.ஏ. சட்டம் உள்ளதாக தீர்மானத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த இந்த தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com