\
ஒற்றை யானை தாக்கியதில் தமிழக வன அதிகாரி உயிரிழப்பு

ஒற்றை யானை தாக்கியதில் தமிழக வன அதிகாரி உயிரிழப்பு

ஒற்றை யானை தாக்கியதில் தமிழக வன அதிகாரி உயிரிழப்பு
Published on

தமிழகத்தை சேர்ந்த இந்திய வன அதிகாரி மணிகண்டன் கர்நாடகாவில் பணியில் இருந்தபோது யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

மதுரையைச் சேர்ந்தவர் மணிகண்டன். கர்நாடகாவில் உள்ள நாகர்ஹோல் புலிகள் காப்பகத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார். காட்டுத் தீயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அவர் சென்றிருந்த போது ஒற்றை யானை ஒன்று அவரை பின்னாலிருந்து தாக்கியதில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை  மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.

கடந்த 2001ம் ஆண்டில் வனப்பணியில் சேர்ந்த மணிகண்டனுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதிச் சடங்குகளுக்காக மதுரைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com