தமிழக மீனவர்கள் 10 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
Published on

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்றுமுன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் இன்று காலை பருத்தித்துறை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும் ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடித்ததால் மீனவர்களை கைது செய்தததாக இலங்கை கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரும், காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி நேற்றுதான் கடிதம் எழுதியிருந்தார். அதில், இலங்கை கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் கடிதம் எழுதிய அடுத்த நாளே, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவ மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com