\
தமிழகத் தேர்தல் முடிவுகள்: திமுக 35 , அதிமுக 31 இடங்களில் முன்னிலை

தமிழகத் தேர்தல் முடிவுகள்: திமுக 35 , அதிமுக 31 இடங்களில் முன்னிலை

தமிழகத் தேர்தல் முடிவுகள்: திமுக 35 , அதிமுக 31 இடங்களில் முன்னிலை
Published on: 

தமிழகத்தில் திமுக 35 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி 243 தொகுதிகளில் திமுக 35 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. வேளச்சேரி தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக 31 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மதிமுக ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. பாமக, பாஜக தலா ஒரு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com